காரசாரமான…. மட்டன் சுக்கா

மட்டன் கொண்டு பல ரெசிபிக்கள் செய்யலாம். அதில் ஒன்று தான் மட்டன் சுக்கா. மட்டன் சுக்காவானது மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். ஆனால் பலருக்கு மட்டன் சுக்காவின் சரியான செய்முறை தெரியாது. ஆகவே உங்களுக்காக மிகவும் எளிமையான மட்டன் சுக்காவின் செய்முறையைக் கொடுத்துள்ளோம்.

இந்த செய்முறையைப் படித்து, அதன்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சரி, இப்போது மட்டன் சுக்காவை எப்படி செய்வதென்று பார்ப்போமா…
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத மட்டன் – 1 கிலோ
வெங்காயம் – 5 (நறுக்கியது)
தக்காளி – 4 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 4
மிளகு – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
பட்டை – 1 இன்ச்
கிராம்பு – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
மட்டன் நன்கு நீரில் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதனை குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை போட்டு, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, சோம்பு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம் மற்றும் மல்லி சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடானதும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் பாதியை சேர்த்து, அத்துடன் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
இறுதியில் குக்கரில் உள்ள மட்டன் துண்டுகளை அத்துடன் சேர்த்து, குக்கரில் உள்ள மட்டன் நீரில் பாதியை ஊற்றி, 10 நிமிடம் வேக வைத்து, நீர் வற்றியதும் மீதமுள்ள மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான மற்றும் காரமான மட்டன் சுக்கா தயார்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *