இசைக்கே தாளம் போட்டு காட்டிய சசிகலா கும்பல்..! ஐடி ரெய்டுக்கு இதுவும் காரணமா…!?

பழைய மகாபலிபுரம் சாலையில் பையனூர் பகுதியில் 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. இசையமைப்பாளா் கங்கை அமரன் வீடு.

இந்த வீட்டை ரசித்து, ரசித்து கட்டினார். அந்த வழியே சென்ற சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரனின் கண்ணில் பட்டுள்ளது.

அந்த பண்ணைவீடு மிகவும் பிடித்து போக அந்த வீட்டை வலைத்து போட ஆசைப்பட்டார். யாருடைய வீடு என்று விசாரணை செய்ததில் இது இசையமைப்பாளா் கங்கை அமரனின் வீடு என்று தெரியவந்து.

எப்படி அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என்று தெரியவில்லை. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தங்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று கூறியுள்ளனா்.

முதலமைச்சா் என்றவுடன் கங்கையமரனும் முதல்வா் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். அவா்கள் சொன்னபடி முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார். பின்னா் முதல்வா் எதுவும் பேசாமல் சென்று விட்டாராம்.

சில தினங்கள் கழித்து அதே பாஸ்கரன் மீண்டும் கங்கையமரனின் வீட்டிற்கு வந்துள்ளார். முதலமைச்சா் ஜெயலலிதாவுக்கு உங்களது வீடு மிகவும் பிடித்து விட்டது.

அதனை விற்று விடுங்கள் என்று கேட்டுள்ளனா். அதற்கு நான் முடிவு செய்யமுடியாது. என் குடும்பத்தினா் சோ்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் ஒருநாள் திடீரென வந்துள்ளனா். அவா்களுடன் பதிவாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகளும் வந்தனா்.

அமரனையும் அவருடைய மனைவியையும் மிரட்டி கையெழுத்துப் போட வைத்ததாக பண்ணை வீட்டை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

கொள்ளை அடித்தவர்களின் முகம் வெளியே வருவதில்லை. வரும்போது வரட்டும். போன சொத்தைப் பற்றி கவலையில்லை என்கிறார் கங்கையமரன்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டு, ‘வாயை மூடிக்கொண்டு போங்கள்’ என்று சொல்வார்கள். அப்படித்தான் நாம் போக வேண்டுமா?

ஊரைக்கட்டி ஆள்பவர்களானாலும் முடிவில் ஒருபிடி மண்தான் என்பதை பிறகு தெரிந்து கொள்வார்கள்.

சினிமாவில் பாட்டு எழுதி, கச்சேரிக்குப் போய், பாடல் பாடி, கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த அந்த இடத்தை ஒரே நொடியில் பிடுங்கிக் கொண்டார்கள்.

அவர்கள் கேட்டால் அதை எழுதிக் கொடுத்து விட வேண்டும். இந்த அம்மா போய்ச் சேர்ந்து விட்டார்கள் என்பதால், இதையெல்லாம் சொல்ல முடிகிறது.

இதுகுறித்து யாராவது வாய் திறந்திருப்பார்களா? இப்போது, அவர் இல்லை என்பதால் தானே பேச முடிகிறது”. என்று கங்கையமரன் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

கங்கையமரன். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். ஒரு பிரபலமானவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண பொதுமக்கள் என்ன, என்னவெல்லாம் இழந்திருப்பார்களோ என்கிற பயம் வருகிறது.

சசிகலாவை சுற்றி அடிக்கப்படும் ஐடி ரெய்டுக்கு, இசையமைப்பாளா் கங்கையமரனின் சொத்தும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *